சாவக்கச்சேரி ஆதார வைத்தியசாலை இரு மாடிக் கட்டத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார்!
- Details
- Published on Monday, 06 February 2012 17:36
- Hits: 72
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரு மாடிக்கட்டத்தை திறந்து வைத்தார்.
இப்புதிய கட்டத்தில் உள்ள வார்டுக்கு அனுமதிக்கப்படவூள்ள முதலாவது நோயாளின் விபரங்களை ஏட்டில் ஜனாதிபதி பதிவூ செய்தார்.
அதன் பின்னர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில ஜனாதிபதி உரையாற்றினார்.
இந்த வைபவத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா- சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். (எம்.ரி.-977)



