ஜனாதிபதி விருதை வெற்றிகொண்ட 332 சாரண மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் அண்மையில் (19) கம்பஹா புனித சிலுவை கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .
இலங்கை சாரணர் சங்கம் ஊடாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் சாரணர் அமைப்புடன் சம்பந்தப்பட்ட சாரணருக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய
உயர் விருதான "ஜனாதிபதி சாரணர் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு " ஒவ்வொரு சாரணர் மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 332 பிரதிநிதிகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
இதனை முன்னிட்டு ஒரு சாரணர் பெறக்கூடிய மிக உயர்ந்த பி பி விருது வழங்கப்பட்டதுடன், இலங்கை சாரணர் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மாவட்ட மதிப்பீட்டுத் திட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட போட்டிகளில் பங்கேற்ற சாரணர் குழுக்களுக்கு கிண்ணங்கள், விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
சாரணர் அமைப்புடன் சம்பந்தப்பட்ட அனைவரும் நாட்டின் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.


