“சிரசர ஷில்ப 2025” சிறைச்சாலை கைதிகளின் கைத்தொழில் மற்றும் விற்பனை கண்காட்சி

“சிரசர ஷில்ப 2025” சிறைச்சாலை கைதிகளின் கைத்தொழில் மற்றும் விற்பனை கண்காட்சி
  • :

சிறைச்சாலையில் தங்கியுள்ள கைதிகளின் ஆக்கத் திறனை தேசிய மட்டத்திற்கு கொண்டு வரும் நோக்கில் அவர்களின் ஆக்கங்களை “சிரசர ஷில்ப 2025” கைத்தொழில் மற்றும் விற்பனை கண்காட்சி” பத்தரமுல்லை தியத்தவளாகத்தில் (15) நேற்று ஆரம்பமானது.

இக்கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் இன்று(16) மற்றும் நாளை (17) முற்பகல் 9.00 முதல் பிற்பகல் 9.00 வரை பத்தரமுல்லை தியத வளாகத்தில் நடைபெறும்.

சட்டத்தினால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளான நபர்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவது சமூகத்திற்கு சிறந்த நபர்களாக அவர்களை உருவாக்கும் நோக்கிலாகும் என்னை ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

ஆரம்ப நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

சிறை கைதிகளின் எளிமைக்காக பெருமதியை வழங்குவதற்கு இவ்வாறான திட்டங்கள் ஒழுங்கமைக்கப்படுவதை பாராட்ட வேண்டும். இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தும் கைதிகளின் திறமைகளை பாராட்டுவதற்காக அவர்களின் பொருட்களை கொளவனவு செய்வதற்கு வருகை தருமாறு பொதுமக்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இதன் போது அவர்களின் படைப்புகளை விலைக்கு கொள்வனவு செய்து வழங்கப்படும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதாக அமையும் என குறிப்பிடலாம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கைதிகளின் கலைநயம் மிக்க திறமைகளினால் உருவாக்கப்பட்ட படைப்புகளை கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன் அவர்கள் சீர்திருத்தப்படும் காலப்பகுதியில் அவர்களினால் தயாரிக்கப்பட்ட கதிரை மேசை அலுமாரி கட்டில் புத்தக இறாக்கை கண்ணாடிமேசை சுவர்ராக்கை போன்ற பொருட்களும் கை சவல் கை முள்ளும் கத்தி உட்பட இரும்புப் பொருட்களும் பென்சில் பெட்டி; தையல் படைப்புகள் செயற்கை உரம் சோளம் காய்கறி வகைகள் மற்றும் பழ வகைகள் நுளம்பு வலை, சாரி சுவர் விளக்கு மேசை விளக்கு உட்பட பல்வேறு உற்பத்தி பொருட்களை இங்கு கொள்வனவு செய்ய முடியும்.

Related Articles