ஒரு வருடத்திற்கு மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடு அச்சிடுதல் பணிகள், போக்குவரத்து நெடுஞ்சதலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குனசேன தலைமையில் இன்று (08) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இது, வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மோட்டார் வாகன ஆய்வு மற்றும் பயிற்சி மையத்தில் நிறுவப்பட்டுள்ள அச்சிடும் பிரிவில் அமைந்துள்ளது.


