முன்மொழியப்பட்டிருக்கும் உயர்கல்விக் கொள்கைக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்கான ஆய்வு

  • :
முன்மொழியப்பட்டிருக்கும் உயர்கல்விக் கொள்கைக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்கான ஆய்வு

 கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் வழிகாட்டலின் கீழ், உயர்கல்விக்கான தேசிய கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் விசேட நிபுணர்கள் குழுவொன்றின் பங்களிப்புடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளை உள்ளடக்கிய பல்வேறு தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகள் மற்றும் கருத்துகளைப் பெற்றுக்கொள்வதற்காக அண்மையில் பல கலந்துரையாடல் சுற்றுகள் நடத்தப்பட்டன. அதற்குச் சமாந்தரமாக, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இதற்கான முன்மொழிவுகள் மற்றும் கருத்துகளைப் பெற்றுக்கொள்வதற்காக இணையவழிக் கேள்வித்தொகுப்பு உயர்கல்விப் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.mohe.gov.lk இல் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் https://mohe.gov.lk/survey.html என்ற இணைய இணைப்பின் ஊடாகச் சென்று தமது கருத்துக்களை முன்வைக்கலாம்.

Related Articles