“She Can Sail the Seas” திட்டத்தின் கீழ் பயிற்சியை முடித்த 09 பெண் கெடட்டுகளுக்கு நியமனக் கடிதங்கள்

“She Can Sail the Seas” திட்டத்தின் கீழ் பயிற்சியை முடித்த 09 பெண் கெடட்டுகளுக்கு நியமனக் கடிதங்கள்
  • :

Centrum Marine மற்றும் Perter Dohle Schiffahrts – KG இணைந்து செயல்படுத்திய “She Can Sail the Seas” திட்டத்தின் கீழ் பயிற்சியை முடித்த 09 பெண் க​ெடட்டுகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவாக்குவின் தலைமையில் நடைபெற்றது.

கடல்சார் துறையில் பாலின பன்முகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு 110,000 அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைத்துள்ளது.

இந்த இளம் பெண்களை நம்பிக்கையுடனும் திறமையுடனும் உருவாக்குவதே இத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்திற்கான பயிற்சி பங்காளியாக CINEC பல்கலைக்கழகம் செயல்படும்.

கடற்படைத் துறையில் நுழைவதற்கான இந்தப் பெண் க​ெடட்டுகளின் உறுதியைப் பிரதி அமைச்சர் பாராட்டினார், மேலும் ஒரு பெண்ணாக இருப்பது எந்தவொரு தொழிலுக்கும் தகுதியற்றதாக இருக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

கடற்படை பொறியாளரான ஜனித ருவன் கொடித்துவக்கு, தனது அனுபவங்களை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார், மேலும் தனது சேவையின் போது சந்தித்த சிறந்த பெண் அதிகாரிகளை நினைவு கூர்ந்தார்.

பெண் கெடட்டுகளை ஊக்குவிக்க Centrum Marine நிறிவனம் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டிய பிரதி அமைச்சர், “ She Can Sail the Seas ” என்ற குறிக்கோளை நனவாக்குவதற்கு பெண் கெடட்டுகள் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

 

Related Articles