மூன்று (03) மீனவர்களை ஏற்றிச் சென்ற ஒரு மீன்பிடிப் படகு இலங்கைக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, சீரற்ற வானிலை காரணமாக ஆபத்துக்குள்ளாகி, கரையுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மீன்வள மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, 2026 ஜூன் 06 மற்றும் 07 ஆகிய இரு நாட்களில் கடற்படை கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு அந்தக் கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது, அனலைத்தீவிற்கு அப்பாலுள்ள கடல் எல்லைப் பகுதியில் ஆபத்துக்குள்ளாகியிருந்த குறித்த மீனவர்களும் அவர்களின் மீன்பிடிப் படகும் 2026 ஜூன் 07 ஆம் திகதி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.


