ஜூலை 28, 2021
sin eng youtube  twitter facebook
    logo

    நுரையீரலைத் தாண்டி உடலின் மற்ற உறுப்புகளையும் கொரோனா வைரஸ் பாதிக்கிறது - ஆய்வின் முடிவு

    ஜூன் 04, 2020

    ஆரம்பத்திலிருந்தே நுரையீரல் கொரோனா வைரஸின் முழுமுதற் இலக்காக அனைவராலும் கருதப்பட்டு வருகிறது. ஆனால் நுரையீரலைத் தாண்டி உடலின் மற்ற உறுப்புகளையும் கொரோனா வைரஸ் பாதிக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    மனித உடலில் கொரோனா வைரஸ் தாக்கும் முதல் உறுப்பு நுரையீரல். மேலும் சிறுநீரகம், மூளை, இதயம் எனப் பல முக்கிய உறுப்புகளையும் அது பாதித்து தீவிர விளைவுகளை ஏற்படுத்துகிறது. கொவிட்-19 வைரஸ், பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலில் இருக்கும் சிறிய சாக்குகளில் வீக்கத்தை உண்டாக்கி நுரையீரல் இயக்கத்தைத் தடை செய்கிறது. ஆரம்பத்திலிருந்தே நுரையீரல்தான் கொரோனா வைரஸின் முழுமுதற் இலக்காக அனைவராலும் கருதப்பட்டு வருகிறது. ஆனால் நுரையீரலைத் தாண்டி உடலின் மற்ற உறுப்புகளையும் கொரோனா வைரஸ் கடுமையாகப் பாதிக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    மேலும், நோய் தீவிரமடையத் தொடங்கும்போது நுரையீரல், இதயம் மற்றும் மூளை என மூன்று முக்கிய உறுப்புகள் மீளமுடியாத பாதிப்புகளைச் சந்திப்பதாகவும், கடுமையான நோய்த்தொற்று உடையவர்களின் உடலில் கூடுதலாக இன்னும் பல முக்கிய உறுப்புகள் பாதிப்படைந்து உயிரிழப்பு அபாயத்தை அதிகரிப்பதாகவும் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

    நுரையீரல்
    கடுமையான கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உடையவர்களுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்படலாம். அக்காய்ச்சல் கடுமையாகும்போது சுவாசக் கோளாறு ஏற்படும். பின்னர், வைரஸ் உடலில் நுரையீரல் இயக்கத்தைத் தடை செய்து உயிரிழப்பு அபாயத்தைத் தூண்டும். இலேசான அறிகுறிகளுடன் காணப்படுபவர்களின் நுரையீரல் செயல்பாட்டுத் திறனையும், கொரோனா வைரஸ் வெகுவாகப் பாதிக்கிறது. அதன் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பைவிட அதிக வேகத்தில் சுவாசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

    அதனால், நுரையீரல் அடியிலிருந்து முழுமையாக சுவாசிக்க முடியாமல் மார்பின் மேலிருந்து மட்டுமே சுவாசிக்க இயலும். நாளடைவில் அவர்களின் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். அவர்கள் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினாலும், இந்தப் பாதிப்பு அவர்களுக்குத் தொடர்ந்து வருடக்கணக்கில் நீடிப்பதாகத் தெரிகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

    இதயம்
    பலருக்கு உடல் வலி மற்றும் தொண்டை புண் போன்ற இலேசான கொரோனா அறிகுறிகள் முதற்கட்டமாக ஏற்படுகிறது. பின் சில நாள்களில் தாக்கம் தீவிரமடைந்து நெஞ்சு வலி ஏற்படுகிறது. இதயத்தில் ஒருவித அழுத்தத்தை உண்டாக்கி, வைரஸ் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இதயத்தின் இயல்புத் துடிப்புத் திறன் கணிசமாகக் குறைந்து காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    மூளை
    மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பலர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலரின் மூளை செயல்திறனை கொரோனா வைரஸ் வெகுவாகப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இலேசான மற்றும் மிகக் கடுமையான அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் குணமடைந்து வீடு திரும்பினாலும், இந்தப் பிரச்னை தொடர்கிறது. பெரும்பாலானவர்களுக்கு இதன் காரணமாக வாசனை உணர்வு இழப்பு ஏற்படுகிறது.

    பொருள்களின் வாசனையை உணர உதவும் மூளை நரம்புகளை இந்த வைரஸ் பாதிப்பதே இதற்குக் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், மூளையின் இயல்புத் திறனை இந்த வைரஸ் பாதிப்பதால் நோயாளிகளின் மனநிலையும் சமநிலை தவறிவிடுவதாகத் தெரிவிக்கின்றனர். மேலே குறிப்பிட்ட உறுப்புகளைத் தவிர்த்து கண், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளையும் கொரோனா வைரஸ் பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

     

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya