ஆகஸ்ட் 01, 2021
sin eng youtube  twitter facebook
    logo

    இங்கிலாந்தில பரவும் புதியவகை கொரோனா வைரஸ் 

    டிசம்பர் 24, 2020

    இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வந்தது. அதற்கான காரணத்தை கண்டறியும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவந்தனர். அப்போதுதான் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவைரசின் தன்மையை விட தற்போதுள்ள கொரோனா வைரசின் தன்மைகள் மாற்றமடைந்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

    • பொதுவாக வைரஸ் வளர்ச்சி மாற்றம் அடைந்து தனது தன்மையை மாற்றிக்கொண்டே இருக்கும். ஆனால், அந்த மாற்றம் பெரும்பாலும் சிறிய அளவில் தான் இருக்கும். அந்த மாற்றங்களால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

    • அதேபோன்று இந்த கொரோனா வைரஸ் இதுவரை 4 ஆயிரத்திற்கு அதிகமான முறை வளர்ச்சி மாற்றமடைந்து தனது தன்மையை மாற்றி கொண்டுள்ளது. வைரஸ் மனித உடலில் தன்னை தகவமைத்துக்கொள்வதை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • தற்போது வைரஸ் பெற்றுள்ள வளர்ச்சி மாற்றத்திற்கு விஞ்ஞானிகள் N501Y என பெயரிட்டுள்ளனர்.

    • இந்த உருமாற்றம் வைரஸ் இதற்கு முந்தைய நிலையை விட மனித உடலில் உள்ள செல்களில் சுலபமாக இணைந்துகொள்கின்றது. வைரசின் புரத அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றமே இந்த தகவமைப்பு மாற்றத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த புரத அமைப்பின் வளர்ச்சியால் ஏற்பட்ட தகவமைப்புகள் மனித செல்களுடன் சுலமாக இணைந்து கொள்கிறது.

    • தற்போது வளர்ச்சி மாற்றமடைந்துள்ள வைரஸ் முந்தைய வைரசை விட 70 சதவிகிதம் வேகமாக பரவும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தெற்கு இங்கிலாந்தில் 60 வெவ்வேறு இடங்களில் 1,000க்கும் அதிகமானோருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    • இந்த புதிய வைரஸ் வேகமாக பரவும் என உறுதியாகியுள்ள போதும் இந்த வைரஸால் பழைய வைரஸை விட அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது என்ற தகவலை உறுதிப்படுத்த இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

    • இதன் மூலம் இந்த கொரோனா வைரசும் பழைய அறிகுறிகளுடனேயே இருக்கும் என தெரியவந்துள்ளது. ஆனால், இந்த வைரஸ் பரவும் வேகம் மிக அதிகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

    • மனித உடலில் தொடர்ந்து பரவவும், நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி போன்றவற்றால் அழிந்துவிடாமல் தன்னை காப்பாற்றிக்கொள்ளவே கொரோனா வைரஸ் தனது தன்மையை தொடர்ந்து மாற்றிக்கொள்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

    • இந்த தகவமைப்பு மனித உடலில் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க முயற்சிக்கும் எனவும், புதிய வகை வைரசுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மனித உடல் உருவாக்க தாமதத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கும் என விஞ்ஞானிகள் நினைக்கின்றனர்.

    • இந்த வளர்ச்சி மாற்றமடைந்த புதியவகை கொரோனா இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த வைரஸ் ஏற்கனவே வேறு நாடுகளில் பரவி இருக்கலாம் எனவும் இங்கிலாந்தில் மருத்துவத்துறையில் உள்ள நவீன ஆராய்ச்சி நடைமுறைகளால் வைரசின் வளர்சிதை மாற்றம் தொடர்பான தகவல்கள் தெரியவந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • இந்த புதிய வகை வைரஸ் இங்கிலாந்தில் பரவும் தகவல் கடந்த 12ஆம் திகதி தெரியவந்தது. ஆனால்இ தென்னாப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலானோருக்கு இதே வளர்ச்சி மாற்றமடைந்த கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் மாதமே பரவியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

    தடுப்பூசி

    • கொரோனா வைரஸ் தனது தகவமைப்பை மாற்றிக்கொண்டு வேகமாக பரவி வரும் போதும் தற்போது பயன்பாட்டில் உள்ள பைசர், மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகள் இந்த புதியவகை வைரஸையும் கட்டுப்படுத்தும் என தெரியவந்துள்ளது.

    • ஸ்புட்னிக் வி தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசிகளும் தற்போதுள்ள புதியவகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா வேகமாக பரவும் வகையில் வளர்சசி மாற்றமடைந்துள்ளபோதும் தற்போதுள்ள தடுப்புசிகள் வைரஸை கட்டுப்படுத்தும் என்ற தகவல் உலக மக்களுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தாலும் மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Last modified on வியாழக்கிழமை, 24 டிசம்பர் 2020 11:52

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya