ஆகஸ்ட் 01, 2021
sin eng youtube  twitter facebook
    logo

    புதிய வகை கொரோனா வைரஸ் இளைய வயதினர் மத்தியில் பரவும் வாய்ப்பு

    டிசம்பர் 26, 2020
    புதிய வகை கொரோனா வைரஸ் இளைய வயதினர் மத்தியில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதன் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலையில், இங்கிலாந்தின் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது.

    இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்நிலையில் ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதாவது தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கு பரிசோதித்ததில் கொரோனாவின் மற்றுமொரு புதிய மாறுபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது.

    இதுவும் இங்கிலாந்தில் சமீபத்தில் கண்டறியப்பட்டது போலவே வீரியமாக பரவும் திறன் கொண்டதாக அறியப்படுகிறது. இந்தநிலையில், இந்த இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவுவதால் மீண்டும் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர்.

    இந்த நிலையில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின்  ஐரோப்பிய நாடுகளுக்கான பிராந்திய இயக்குநர் ஹன்ஸ் க்லுகே இந்தத் தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,  உலக சுகாதார அமைப்பு நிலமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை மேலும் தீவிரம் ஆக்குவது அவசியம். புதிய வகை கொரோனா இளைய வயதினர் மத்தியில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது' என்றார்.
     
     
    Last modified on சனிக்கிழமை, 26 டிசம்பர் 2020 15:07

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya