ஜூன் 21, 2021
sin eng youtube  twitter facebook
    logo

    எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் தெரிவுக்குழு கூட்டம் இடம்பெறும்

    ஜூன் 14, 2019

    எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட தெரிவுக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

    முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளான ஹிஸ்புல்லா, அசாத் சாலி, றிசாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக 27 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

    முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக கடந்த 4ம் திகதி அமைக்கப்பட்ட குழுவிடம் முறைப்பாடுகளைக் கையளிக்கும் நடவடிக்கை நேற்று மாலை 4.00 மணியுடன் நிறைவு பெற்றது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ஷகர் தலைமையில் இந்த முறைப்பாடுகள் பொறுப்பேற்கப்பட்டன.

    பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக 12 முறைப்பாடுகளும், அசாத் சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகளும், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 2 முறைப்பாடுகளும் இவர்கள் மூவருக்கு எதிராக 8 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

    இந்த முறைப்பாடுகள் அனைத்தும் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya