ஜூன் 25, 2021
sin eng youtube  twitter facebook
    logo

    வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்

    அக்டோபர் 08, 2020

    2020 ஆம் ஆண்டுக்கான வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலிடத்தையும்,ஆண்கள் அணியினர் இரண்டாமிடத்தைப் பெற்றனர்.

    வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் இந்த போட்டி 02ம் திகதி தொடக்கம் 05ம் திகதி வரை இடம்பெற்றது. வடமாகாண அனைத்து மாவட்டங்களுக்குமிடையிலான குத்து சண்டை போட்டியிலேயே முல்லைத்தீவு மாவட்ட அணியினர் முதலாவது மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.Capture Mulli 01மேலும் பெண்கள் அணியினருக்கான போட்டியில் வவுனியா மாவட்டம் இரண்டாமிடத்தையும்,,மன்னார் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்

    ஆண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தை வவுனியா மாவட்டமும், மூன்றாமிடத்தினை மன்னார் மாவட்டமும் பெற்றுக்கொண்டன
    முல்லைத்தீவு மாவட்ட அணியில் உண்ணாப்பிலவு, தீர்த்தகரை, செல்வபுரம், முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, விஸ்வமடு, கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய பிரதேச வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Last modified on வியாழக்கிழமை, 08 அக்டோபர் 2020 08:53

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya