ஏப்ரல் 22, 2021
sin eng youtube  twitter facebook

    தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு குண்டு தாக்குதலொன்று இடம்பெறவிருப்பதாக கூறி போலி அழைப்பு - சந்தேக நபர் கைது

    ஏப்ரல் 20, 2021

    தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு குண்டுத் தாக்குதலொன்று இடம்பெறுவதற்கான வாய்ப்பொன்று இருப்பதாக போலி தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேகநபர் இம்மாதம் 28 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தங்கொட்டுவ, மொகட்டுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான பெண் ஒருவர் என்பதுடன், சந்தேக நபரினால் தொடர்பு கொள்ளப்பட்ட தொலைபேசியின் உரிமையாளரான அவரது சகோதரியை 3 லட்சம் சரீரப் பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 18 ஆம் திகதி இரவு 119 என்ற அவசர தொலைபேசி பிரிவுக்கு அழைப்பு விடுத்து, தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு அன்றைய இரவு குண்டுத்தாக்குதலொன்று இடம்பெறவிருப்பதாகவும் அதற்காக கொழும்பிலிருந்து பாதாள குழுவொன்று வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த தகவலுக்கமைய, தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்தி குறித்த தொலைபேசி பகுப்பாய்வுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

    விசாரணையை மேற்கொண்ட வென்னப்புவ விசேட பொலிஸ் செயலணியின் அதிகாரிகளினால், தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட தொலைபேசி சம்பந்தமாக தகவல்கள் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்கள் வசிக்கின்ற பகுதியை சுற்றிவளைத்து சந்தேகநபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தங்கொட்டுவ பொலிஸ் நிலையம் மற்றும் வென்னப்புவ பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயமும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya