மே 17, 2021
sin eng youtube  twitter facebook

    கொழும்பில் கொரோனா தொற்று வீதம் உயர்வு - சில பகுதிகளில் எழுமாறான பிசிஆர் பரிசோதனை

    ஏப்ரல் 21, 2021

    கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் கடந்த காலங்களில் 2 சதவீதமாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்சமயம் 8 சதவீதமாக உயர்வடைந்திருப்பதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி றுவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக கடந்த வியாழக்கிழமை முதல் இந்த அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளது.

    இதனால், நேற்றிலிருந்து கொழும்புவடக்கு, மத்திய கொழும்பு, கொழும்பு கிழக்கு மற்றும் கொழும்பு மேற்கு ஆகிய பிரதேசத்தில் எழுந்தமாறாக பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    குறித்த பகுதிகளில் நாளொன்றுக்கு 600 பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் எழுந்தமாறாக பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி றுவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya