ஜூன் 07, 2021
sin eng youtube  twitter facebook
    logo

    இலங்கையில் கொரோனா வைரசு: தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    ஏப்ரல் 26, 2021

    இலங்கையில் இன்றைய (25) தினம் மேலும் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான 952 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இவர்களுள் 60 பேர் பேலியகொட - சிறைச்சாலை கொவிட் கொத்தணிகளுடன் தொடர்புடையவர்களாவர்.

    இதற்கமைவாக திவுலப்பிட்டி - பேலியகொட, சிறைச்சாலை கொவிட் கொத்தணிகளில பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 698 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 2 ஆயிரத்து 271 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 577 ஆகும். இது 93 தசம் இரண்டு ஒன்பது சதவீதமாகும்.

    கொவிட் தொற்றாளர்கள் குணமடையும் உலக சுட்டியில் தொடர்ந்தும் இலங்கை முன்னிலையில் உள்ளது. எனினும் கடந்த சில தினங்களாக நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 700ற்கும் அதிகம் என்பதால் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    நாட்டில் 7 ஆயிரத்து 50 நோயாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேவேளை ,இலங்கையில் இன்றைய (26) தினம் கொரோனா வைரசு தொடர்பான மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

    இதற்கமைவாக ,இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 644 இல் இருந்து 647 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (26) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Covid DEath 26.04.2021

    Last modified on செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021 08:50

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya