இதற்கமைவாக, கடந்த மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் கொவிட் சீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 342 பேருக்கு ஏற்றப்பட்டிருக்கின்றது.
நேற்று வரை அதன் இரண்டாவது டோஸ் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 286 பேருக்கு ஏற்றப்பட்டிருப்பதாக அந்தப் பிரிவு அறிவிருக்கின்றது. அத்துடன் 2 ஆயிரத்து 865 பேருக்கு சினபோம் தடுப்பூசியின் முதலாவது டோசும் 2 ஆயிரத்து 432 பேருக்கு அதன் இரண்டாவது டோசும் ஏற்றப்பட்டிருக்கின்றது. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இலங்கையில் தங்கியிருக்கும் சீனப் பிரஜைகளுக்கு சினபோம் தடுப்பூசி ஏற்றப்படுகின்றன.




















