நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்று :
காங்கேசந்துறையிலிருந்து மன்னார்மற்றும் கொழும்பு ஊடாககாலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது தெற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



















