ஜூன் 25, 2021
sin eng youtube  twitter facebook
    logo

    'தலைக்கு மேல் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது' - இந்திய  அரசுக்கு உயர் நீதிமன்றம் தெரிவிப்பு

    மே 01, 2021

    'தலைக்கு மேல் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. தில்லி மருத்துவமனைகளுக்கு எப்படியாவது தேவையான ஒட்சிசன் கொடுங்கள்' என இந்திய  அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கொரோனா 2வது அலை பரவலில் மருத்துவ ஒட்சிசன் பற்றாக்குறை தொடர்பாக தாக்கலான பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
    இந்த வழக்குகளை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், 'தலைக்கு மேல் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் தான் எல்லாவற்றையும் தயார் செய்ய வேண்டும். 8 உயிர்கள் பலியாகியுள்ளன.
    இதையெல்லாம் கேட்காமல் காதுகளை மூடிக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் தான் டெல்லிக்கு அன்றாடம் 490 மெட்ரிக் டன் மருத்துவ ஒட்சிசன் வழங்கப்படும் என உறுதி அளித்தீர்கள். அதைக் காப்பாற்ற வேண்டியது  அரசின் பொறுப்பு ஆகும்.
    நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது 490 மெட்ரிக் டன் மருத்துவ ஒட்சிசன் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    மருத்துவமனைக்கு ஒட்சிசன் ஒதுக்கப்பட்டும் உரிய நேரத்தில் ஒட்சிசன் கொடுக்காதது ஏன் என இநதிய மத்திய அரசிடம் கேட்டுள்ளனர்.
    அதிகாரிகளுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனை
    இதேவேளை , இந்தியாவில் கொரோனா வைரசு தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இநதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.
     
    இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.
    நாடு முழுவதும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளை ராணுவம் செய்து வருகின்றது.
    இந்நிலையில்,,கொரோனா பேரிடரை சமாளிக்க ஆயுதப் படைகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முப்படைகளின் தளபதிகள், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இன்று மாலை ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya