ஜூலை 18, 2021
sin eng youtube  twitter facebook
    logo

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,34 கோடியை தாண்டியது

    மே 03, 2021

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போதைய (3.05.2021) நிலவரப்படி, 15,34 கோடியை தாண்டி உள்ளது.

    இதன்படி உலகம் முழுவதும் தற்போது 15,34,78,525 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13,07,90,684 பேர் குணமடைந்துள்ளனர்.

    மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 லட்சத்து 16 ஆயிரத்து 128 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா தொற்றுக்கு தற்போது 1,94,71,713 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,11,785 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.07 கோடியாக அதிகரித்துள்ளது.

    சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகின்றது.

    இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை புரட்டி எடுத்து வருகின்றது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    Last modified on திங்கட்கிழமை, 03 மே 2021 11:02

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya