அதேவேளை கொரோனா பாதிப்பில் இருந்து 2394 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,98,289
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. எல்லா மாவட்டங்களிலுமே பாதிப்பு குறைந்துவிட்டது.
ஒரே நாளில் 29 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33,995 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஆகக்கூடுதலாக கோவையில் 179 பேரும். ஈரோட்டில் 140 பேரும், சென்னையில் 164 பேரும், சேலத்தில் 92 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழாக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் மட்டும் அதிகமாக 1917 பேர் உள்ளனர். சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், தஞ்சாவூரில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் என தெரிவிக்கப்பட்டுளள்து.



















