இலங்கையின் வன முறையைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினரின் சுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக புதிய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வேலைத்திட்டமே "වනස්පති" (வனஸ்பதி) ஆகும்
.
2025 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான நில்கல காடு உட்பட 29 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டன.
2026 ஆம் ஆண்டு உலக காடுகள் தினத்தை முன்னிட்டு, மேலும் 12,989.73 ஹெக்டேயர் வனப்பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வனங்களாகப் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


