இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டும், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பாதுகாக்கும் அதேவேளையில் கடந்த காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கடந்து செல்வதில் இலங்கையின் வெற்றிக்கதையை எடுத்துக்காட்டும் வகையிலும் நிதியியல் உறுதிப்பாட்டு மாநாட்டை 2025 மே 23 அன்று கொழும்பில் நடாத்தியது.
