'ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்' என்ற தேசிய திட்டத்தின் கீழ், தற்போது விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாத, ஆனால் பயன்படுத்த முடியுமான நிலங்களில் இந்த ஆண்டு சிறுபோகத்தில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மாத்தளை மாவட்ட பிரதி விவசாய ஆணையாளர் டி.எம்.ஆர்.சி. தசநாயக்க அண்மையில் இடம்பெற்ற மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இத் திட்டத்தின் கீழ், பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களில் விவசாயிகள், விருப்பமான பயிரை பயிரிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மாத்தளை மாவட்டத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாத 3058 நிலத் துண்டுகளில், 968 ஹெக்டயர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, 2290 பயிரிடப்படாத வயல்களில், 419 ஹெக்டயர் நிலங்களும், 768 பயிரிடப்படாத நிலங்களில் 549 ஹெக்டயர் நிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.