தெதுறுஓயா ஆற்றுப் படுகை யின் உயர் மற்றும் மத்திய பிரதேசங்களில் ஏற்பட்ட அதிக மழை காரணமாக தெதுறுஓயாவின் நீர்மட்டம் வெள்ள அனர்த்தம் ஒன்றை ஏற்படுத்தும் நிலையை அண்மித்துள்ளது.
மேலும் ஓயாதெதுறு நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேறும் வான் கதவுகள் தற்போது நிமிடத்திற்கு 16000 கன அடி வேகத்தில் தெதுறுஓயாவிற்கு அனுப்பப்படுகிறது. தற்போது நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீர் கொள்ளளவைப் பொறுத்து, எதிர்காலத்தில் இந்த அளவை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும்.
இந்நிலை காரணமாக ஆற்றுப் படுகையில் உள்ள வாரியபொல, நிகவரெடிய, மஹவ, கொபெயிகனே, பிங்கிரிய, பள்ளம், சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் றஸ்னாயகபுர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட வெள்ளப்பெருக்கின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாயம் காணப்படுகின்றது.
இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 'தூய இலங்கை' தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கனமழை தொடர்பான வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனர்த்த முன்னெச்சரிக்கை
கிழக்கு, ஊவா மற்றும் வட-மத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்கானது
அவதான இருக்கவும்!
வடகிழக்கு பருவமழை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஜனவரி 19ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக சற்று அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய தினத்திற்கான வானிலை எதிர்வுகூறல்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 10 மி.மீ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 150 மி.மீ.க்கும் அதிகமான மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 10 மி.மீ. மழை பெய்யக்கூடும். 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மின் கட்டணம் சுமார் 20% வீதத்தால் குறைக்கப்படும் என்றும், பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயக்கொடி அறிவித்தார்.
பல்வேறு காரணிகளால் இந்நாட்டில் மக்களுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரால், 2025 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி கல்பிட்டி பராமுனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் டிங்கி மூலம் கொண்டு செல்லப்பட்ட, அனுமதிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சுமார் இரண்டாயிரத்து முப்பத்தேழு (2137) ஹேக் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.