விவசாயத் திணைக்களம் மற்றும் விவசாய அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து பெரும்போகத்திற்காக விசேட விதை நெல் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. உத்தரவாத விதை நெல்லை விவசாயிகளுக்கு வழங்குவதனால் தரமான மற்றும் வெற்றிகரமான அறுவடையைப் பெற்றுக்கொள்வதற்கு இத்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது.
All Stories
அத்தியவசியப் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை (16) காலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (17) மாலை 6.00 மணி வரையான 12 மணித்தியால காலப்பகுதியில் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் இடை நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நீர் மட்டத்தை கண்காணிக்கும் பொறியியலாளரின் ஆலோசனைப்படி, உல்ஹிட்டிய - ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் அதிகப்படியான நீரை வெளியேற்றுவதற்காக வெளியேற்றும் வாயில்கள் ஏழும் 0.5 மீட்டர் வரை திறக்கப்பட்டுள்ளன என்று பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.
பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) நிஷாந்த சமரவீர ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முதன்முறையாக அண்மையில் (09) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.
குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) நிஷாந்த சமரவீரவின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி முன்மொழிந்ததுடன், அதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ வழிமொழிந்தார்.
தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் உரையாற்றிய கோப் குழுவின் புதிய தலைவர், குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அத்துடன், வழங்கப்பட்ட பொறுப்பை மிகவும் முக்கியமானதாகக் கருதுவதாகவும், எதிர்காலத்தில் பக்கச்சார்பின்றி செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறந்த தொழில் சார் சூழலை வழங்குவதன் ஊடாக ஒரு சுகாதார நிபுணர் நாட்டு மக்களுக்கு மிகவும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவார் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்ததுள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (15) பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping)சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கவுள்ளார்.
உழவர் திருநாளான பாரம்பரிய தைப் பொங்கல் பண்டிகைக்கான சடங்குகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜனவரி 14 ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 )சீன நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 ) சீனா நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.