மத்திய வங்கியின் 2024 வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை அரசாங்கத்தின் மருத்துவமனை கட்டமைப்பினை டிஜிட்டல் மயமாக்கி, குறுகிய காலத்தில் இந்த நாட்டு மக்களுக்கு தரமான, வினைத்திறனான சேவைகளை வழங்குவதும், நோய்வாய்ப்பட்ட பொதுமக்களுக்கு மிக உயர்ந்த அளவிலான பராமரிப்பு, மற்றும் வசதியான இடமாக மாற்றுவதும் சுகாதார அமைச்சகம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பதவிய பிரதேச செயலகப் பிரிவின் போகஹவெவ கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள கொலொங்கொல்ல குளக்கட்டின் பகுதியளவு சேதமடைந்த பகுதியை 9 வது கஜபா படையணி படையினர் 2025 ஏப்ரல் 04 ஆம் திகதி வெற்றிகரமாக சீரமைத்தனர்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை கலாநிதி அந்தோணிப்பிள்ளை ஞானப்பிரசாகம் அவர்களை 2025 மார்ச் 30 அன்று மன்னார் ஆயர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
சமீபத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் அனர்த்த நிவாரணக் குழு இன்று (ஏப்ரல் 5) சிறப்பு விமானம் ஒன்றில் மியான்மருக்குப் புறப்பட்டது.
மியன்மாருக்கான இலங்கையின் சிறப்பு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவி அனர்த்த நிவாரணக் குழு, சனிக்கிழமை (ஏப்ரல் 05) யங்கோன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
மழை நிலைமை:
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகமட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
2025 ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.
கம்பஹா, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையத்தில் விஷேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் 04ம் மற்றும் 05 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நுகர்வோருக்கு தொடர்ச்சியாக நியாயமான விலையில் புதிய மீன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நீர்கொழும்பு கம்பஹா பிரதேச முகாமையாளர் மற்றும் ஊழியர்களினால் வழிநடத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் விஷேட குலுக்கல் சீட்டிழுப்பும் நடத்தப்பட்டு பெறுமதியான பரிசுகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான அரச விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இன்று (06) முற்பகல் அநுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவிற்குப் புறப்பட்டுச் சென்றார்.
மஹவ - ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ - அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோரால் இன்று (06) திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு, கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (05) இரவு ஜனாதிபதியினால் சிறப்பு இரவு விருந்து வழங்கப்பட்டது.