தக்ஷின ஜீவக அபிமன் (தெற்கில் வாழும் அபிமானி) 2024 நிறுவன பாராட்டு விழா அண்மையில் (09) காலி லபுதுவ தென்மேற்கு அமைச்சு கட்டட தொகுதியின் கேட்போர் கூடத்தில் தென்மாகாண ஆளுநர் எம்.கே பந்துல ஹரிஷ் சந்திர தலைமையில் இடம் பெற்றது.
All Stories
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதுக்குழு பிரதானிகள் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை பாராளுமன்றத்தின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர்.
திட்டமிடல் இன்றி, அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் பற்றாக்குறை மற்றும் தேவைகளுக்குப் பொருத்தமில்லாத பௌதீக வளங்களை வழங்குவதன் அடிப்படையில் வைத்தியசாலைகள்மற்றும் அமைச்சுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன் முறைப்பாடுகளும் முன்வைக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமித்துள்ளார்.
மட்டக்களப்பு கிரான் குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய் சஞ்சீவனி வைத்தியசாலை சுமார் 2000 நோயாளர்களுக்கு மேல் இலவச இருதய சிகிச்சைகளை மட்டக்களப்பு போதான வைத்தியசாலை இருதய மருத்துவப் பிரிவு மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை வசதிகளைப் பயன்படுத்தி செயற்பட்டு வருகின்றது.
இதன் அடுத்த கட்டமாக இருதயமாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான சத்திரசிகிச்சைக் கூடம் மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு என்பன கடந்த 04.01.2025 அன்று இவ் வைத்தியசாலையின் நிறுவுனர் சற்குரு. மதுசூதனன் சாய் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதான வைத்தியசாலை இருதய மருத்துவப் பிரிவு மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை என்பவற்றுடன் இணைந்து கடந்த 01.06.2023 அன்று தனது கெத் லேப் சேவையினை ஆரம்பித்தது 18 மாதங்கள் கடந்த நிலையில் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டு, இலவசமாக நடாத்தப்பட்டு வருகிறது.
இந் நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அரவிந்தடி சில்வா, முத்தையா முரளிதரன், சமிந்தவாஸ், அஜந்த மென்டிஸ் மற்றும் இவ் வைத்தியசாலையின் இலங்கை தலைமை அதிகாரி பென்னி ஜெயவர்த்தன, வைத்தியசாலை பணிப்பாளர் ரமேஸ் ராவ், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி இரா. முரளீஸ்வரன், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி. ஜே.ஜே.முரளிதரன், இருதய வைத்திய நிபுணர்களான வினோதன் மற்றும் ரஜீவன் பிரான்சிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் கடந்த காலங்களில் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்றே இச் சேவையினை மட்டக்களப்பு வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவு மேற்கொண்டு வந்திருந்தது. தற்போது மாவட்டத்திலேயே இச் சேவை காணப்படுவதனால் மிக வேகமாக இப்பகுதி மக்களுக்கு சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'கிளீன் சிறிலங்கா' திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை காலை (09.01.2025) இடம்பெற்றது.
Clean Sri Lanka திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (2025.01.09) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்திய அரசின் உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 8 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 40 வது நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள மின்சார கட்டணம் திருத்தம் தொடர்பாக கிழக்கு மாகாண பொதுமக்களின் ஆலோசனையினை கேட்கும் கலந்துரையாடல் மட்டக்களப்பில் நேற்று (08) நடைபெற்றது. முன்மொழியப்பட்ட மின்சார கட்டணம் தொடா்பான ஆலோசனைகளைக் கேட்டறிந்து கொள்ளும் கலந்துரையாடல் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பேராசிரியர் லலித் சந்திரலால் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.