All Stories

இலங்கையில் டிஜிட்டலில் தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான பொறியியல் ஆலோசனை சேவைகள் ஒப்பந்தம் கையெழுத்தானது

இலங்கையில் டிஜிட்டல் தொலைக்காட்சி ஒளிபரப்பு (DTTB) திட்டத்தை செயல்படுத்துவதற்கான பொறியியல் ஆலோசனை சேவைகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு நேற்று (03) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதர் இசோமாட்டா அகியோ ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கையில் டிஜிட்டலில் தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான பொறியியல் ஆலோசனை சேவைகள் ஒப்பந்தம் கையெழுத்தானது

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில்

க்கற்றுச் சென்ற பொருளாதாரத்தையே நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம்
· சரிந்து போன நெல் சந்தைப்படுத்தல் சபை போன்ற அரச நிறுவனங்களை மீளமைப்புச் செய்யும் பொறுப்பை நிறைவேற்றுவோம் - ஜனாதிபதி

சம்பிரதாயபூர்வமாக வருடாந்த பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியை கொண்டு ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யும் தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) காலை வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியவிற்கு அருகாமையில் நடைபெற்றது.

அடமஸ்தானாதிபதி வண பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரின் அறிவுரைக்கமைய, “உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு பிடியளவு கமநிலத்திற்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் விவசாய அமைச்சு மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களம் என்பன இணைந்து 58 ஆவது தேசிய புத்தரிசி விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

மன்னர் காலத்திலிருந்தே நடைபெற்று வரும் இந்த பண்பாட்டு நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர் "நேரத்திற்கு மழை பொழிய வேண்டும் - விளைநிலங்கள் செழுமையாக வேண்டும்" என்றும், விவசாயத்தினால் நாடு தன்னிறைவடைந்து நாட்டின் பொருளாதாரம் செழிக்க வேண்டும் என்றும், தேசத்திற்கு நலன் வேண்டியும் சம்பிரதாய முறையில் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.

தேசிய புத்தரிசி விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதலில் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

அநுராதபுரம் சிங்கத்தூணின் அருகிலிருந்து வருகைதந்த புத்தரிசி ஊர்வலம் ஜய ஸ்ரீ மஹா போதியை அடைந்தவுடன் சம்பிரதாயங்களுக்கு அமைவாக புத்தரிசி விழா ஆரம்பமானது.

அடமஸ்தானாதிபதி வண பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர், தங்கப் பாத்திரத்தில் புதிய அரிசியை நிரப்ப ஆரம்பித்ததை தொடர்ந்து அனைத்து மாகாணங்களிருந்தும் கொண்டு வரப்பட்ட அரிசியால் தங்கப் பாத்திரம் நிரப்பப்பட்டது.

மஹா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் தங்கப் பாத்திரத்தில் அரிசியை நிரப்பும் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்துகொண்டார்.

சம்பிரதாயபூர்வமாக ஜய ஸ்ரீ மஹாபோதியவிற்கு பூஜை செய்யவதற்கான தூய தேன் பானை இதன்போது ஊருவரிகே வன்னில எத்தோவினால் ஜனாதிபதியிடம் வழங்கிவைக்கப்பட்டது.

ஜய ஸ்ரீ மஹா போதியவிற்கு நெய் பூஜை செய்வதற்காக சப்ரகமுவ வரலாற்று சிறப்புமிக்க சமன் தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய் பானையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

58 ஆவது தேசிய புத்தரிசி விழாவின் நினைவுப் பதிப்பும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், நாட்டின் விவசாய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்த விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கான நினைவுப் பரிசுகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.

விஷமில்லா விளைச்சலைப் பெறுவதற்காக மாகாண மட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் பகிர்ந்தளிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

பின்னர் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, திக்கற்றுச் சென்ற பொருளாதாரத்தையே தற்போதைய அரசாங்கம் மாற்றிக்கொண்டிருப்பதாகவும், நெல் களஞ்சியங்கள் அழிவடைய இடமளித்து, நெல் சந்தைப்படுத்தல் சபை சுமார் 2,800 கோடி ரூபா கடன் சுமையை கொண்டிருப்பதாகவும், அந்த சரிவுகளில் இருந்து மீட்டெடுத்து மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்புச் செய்யும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதன்போது இந்நாட்டின் விவசாயத்துறைக்கு அமைவான அரச பொறிமுறையை போலவே ஒட்டுமொத்த விவசாய சமூகத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், நாட்டின் கலாச்சார ஒழுக்கக் கட்டமைப்பையும் இணைத்துக்கொண்டு, தேசிய போருளாதாரத்தினை பலப்படுத்த மீண்டும் விவசாய பொருளாதார பாரம்பரியத்தை பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நமது முந்தைய மன்னர்கள் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் துறைகளுக்கு ஆற்றிய சேவையின் மூலம் மகத்துவத்தை அடைந்துள்ளதாகவும், நாட்டை உணவில் தன்னிறைவு பெறச் செய்வது மிகவும் முக்கியம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நிலைபேறான அபிவிருத்தி இன்று உலகளாவிய ரீதியில் பேசுபொருளாகியுள்ளதாகவும், இலங்கையின் நீர்வள நாகரிகம் நிலைபேறான அபிவிருத்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்நாட்டின் நீர்ப்பாசனக் கட்டமைப்பு ஏற்கனவே விவசாய வளர்ச்சிக்கு நிலையான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

எனவே, நீர்ப்பாசன கட்டமைப்பை மீண்டும் புனர்நிர்மானம் செய்வதற்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 02 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டின் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக வடமத்திய மகா எல திட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள்
தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், மரபணு உரிமைகளைப் பாதுகாத்து விதைகளில் தன்னிறைவு பெற்ற நாட்டை உருவாக்க விதைப் பண்ணைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயப் உற்பத்திகளுக்கு விவசாயியைப்போன்று நுகர்வோருக்கும் நியாயமான விலை தேவை என்றும் நீண்ட காலமாக சந்தை சீர்குலைவு ஏற்பட்டுள்ளதால், விவசாயி மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினருக்கும் நியாயமான விலையை வழங்க அடுத்த இரண்டு அல்லது மூன்று போகங்களில் அரசாங்கத்தின் தலையீடு மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அரசின் தலையீட்டிற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் நெல்லை சேமித்து வைப்பதற்கான கொள்ளளவு வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த செயல்முறையை முன்னோக்கி எடுத்துச் செல்வதன் மூலம் சந்தை சீர்குலைவைத் தவிர்க்க முடியும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ருவன்வெலிசாய சைத்தியாராம விகாராதிபதி ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் வண. ஈத்தலவெடுனுவெவே ஞானதிலக தேரர்,லங்காராமாதிபதி வண ரலபனாவே தம்மஜோதி தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர், விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிறி, விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில்

தலைமைத்துவம் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான பண்டாரநாயக்க அகடமியின் பயிலுனர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வு

தலைமைத்துவம் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான பண்டாரநாயக்க அகடமியின் பயிலுனர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வு நேற்று (03) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமையதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன மற்றும் சட்டவாக்க சேவைகள் திணைக்களப் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களப் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா அகியோர் வளவாளர்களாக இதில் கலந்துகொண்டனர்.

தலைமைத்துவம் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான பண்டாரநாயக்க அகடமியின் பயிலுனர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வு

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பிலான செயலமர்வு.

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு கடமையில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான அஞ்சல் மூல வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பிலான செயலமர்வானது இன்று (04) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பிலான செயலமர்வு.

அரசாங்க தாபனங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல்

அரசாங்க தாபனங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒழுங்குபுடுதுதல் தொடர்பாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அரசாங்க தாபனங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல்

விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளை ஒருங்கிணைக்கும் கூட்டுறவு வங்கி முறையை நிறுவுவதற்கு கொரியா ஆதரவு

கொரிய குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக கொரிய குடியரசின் தூதுவர் மியான் லீ மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளை ஒருங்கிணைக்கும் கூட்டுறவு வங்கி முறையை நிறுவுவதற்கு கொரியா ஆதரவு

பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துகள் தொடர்பாகக் கவனமாக இருங்கள்

பண்டிகைக் காலத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருந்து அவ்விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்குமாறு சமூக மருத்துவ விஞ்ஞானம் தொடர்பாக விசேட வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துகள் தொடர்பாகக் கவனமாக இருங்கள்

மூன்றாண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தாய்லாந்து பயணம்...

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெறும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) அமைப்பின் 6 ஆவது உச்சி மாநாட்டில் பங்குபற்றும் தலைவர்களுக்கான இராப்போசன விருந்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (03) கலந்து கொண்டார்.

மூன்றாண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தாய்லாந்து பயணம்...

இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும்

5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்  இலங்கை வருகை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் போர் பொறியாளர்கள் கருத்தரங்கு 2025 இல் சிறப்புரை நிகழ்த்தினார்

‘விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய சவால்களால் வரையறுக்கப்பட்ட ஒரு சகாப்தத்தில், தகவமைப்பு என்பது ஒரு தேவையாக மாறியுள்ளது.’ என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) வியாழக்கிழமை (ஏப்ரல் 3) கொழும்பில் உள்ள கிராண்ட் மெய்ட்லண் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை பொறியாளர்கள் கருத்தரங்கில் சிறப்புரையாற்றும்போது தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் போர் பொறியாளர்கள் கருத்தரங்கு 2025 இல் சிறப்புரை நிகழ்த்தினார்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]