All Stories

'Dream Destination' திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்ட நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு

அரச - தனியார் கூட்டுப் பங்களிப்புடன் நாடு முழுவதிலும் உள்ள 100 புகையிரத நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி நவீனமயமாக்கும் Dream Destination திட்டத்தின் கீழ், வசதிகள் மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட நாரஹேன்பிட்ட புகையிரத நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இன்று (06) முற்பகல் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை புகையிரத திணைக்களத்தின் மேற்பார்வையில், Clean Sri Lanka செயலகத்தினால் நிலைபேறான திட்டமாக Dream Destination வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

'Dream Destination' திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்ட நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு

“வரி சக்தி 2026” தேசிய வரி வாரம் ஆரம்பம்

வரி சக்தி 2026 என்பது வெறும் வரி வசூலிக்கும் செயற்பாடு மாத்திரமன்றி, அது நாட்டை நேசிக்கும் மற்றும் பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டமாகும்

இன்று எவரிடமிருந்தும் கடன் பெறாமல், உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

  - சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன

“வரி சக்தி 2026” தேசிய வரி வாரம் ஆரம்பம்

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு 1,252 பேர் நாளை இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு 1,252 பேர் நாளை (07) இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

சூரிய ஒளியைப் பயன்படுத்தி விஞ்ஞான ரீதியாக ஆரோக்கியமான முறையில் மீன்களை உலரவைக்கும் கூடங்களை அமைப்பதற்கான முன்னோடித் திட்டம்

கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நன்னீர் மற்றும் கடல்நீர் மீன்பிடித் தொழிலில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி, நுகர்வோருக்கு ஆரோக்கியமான தயாரிப்புகளை வழங்கும் நோக்கில், விஞ்ஞான ரீதியான மீன் உலர்த்தும் கூடங்களை அமைப்பதற்கான முன்னோடித் திட்டம் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் அண்மையில் வத்தளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
சூரிய ஒளியைப் பயன்படுத்தி விஞ்ஞான ரீதியாக ஆரோக்கியமான முறையில் மீன்களை உலரவைக்கும் கூடங்களை அமைப்பதற்கான முன்னோடித் திட்டம்

கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க ஆகியோரின் தலைமையில், எரிசக்தி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் அண்மையில் நடைபெற்றது.
கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

இலங்கை விமானப்படை தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் சமூக சிரமதான நிகழ்ச்சியை முன்னெடுத்தது

நேற்று(04 ஜூலை) காலை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக, இலங்கை விமானப்படை (SLAF) விசேட சமூக சிரமதான நிகழ்ச்சியொன்றை முன்னெடுத்து தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இணைந்தது.

இலங்கை விமானப்படை தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் சமூக சிரமதான நிகழ்ச்சியை முன்னெடுத்தது