உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களால் சமூக விழிப்புணர்வுத் திட்டம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களால் சமூக விழிப்புணர்வுத் திட்டம்
  • :

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் "சுற்றுச்சூழல் வாரத்திற்காக" மேல் மாகாண சபை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

அதன்படி, மேல் மாகாண சபை, மேல் மாகாண கழிவு முகாமைத்து அதிகார சபை மற்றும் மேல் மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் தலைமையில் பாடசாலை மற்றும் சமூகத்தின் பங்களிப்புடன் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மேல் மாகாண ஆளுநரின் வழிகாட்டலின் கீழ், பிலியந்தலை புதிய பஸ் நிலையத்தின் முன், கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சதுர ருவன் தரங்க தலைமையில் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் சமூக விழிப்புணர்வு திட்டம் ஒன்று அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது .

இதற்காக, பாடசாலைகள் உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வின் முதல் நாளில், "பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம்" என்ற தலைப்பில் பாடசாலை மாணவர்களால் கழிவு இல்லாத சூழல் குறித்த விளம்பர பலகை காட்சிப்படுத்தப்பட்டது, தெரு நாடகம் மூலம் சமூக விழிப்புணர்வு திட்டம் மற்றும் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கிய நடைபயணம் என்பனவும் இடம்பெற்றன.

Related Articles