All Stories

பாதுகாப்புக் கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் - பதில் பொலிஸ்மா அதிபர்

பாதுகாப்புக் கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் - பதில் பொலிஸ்மா அதிபர்

🔸 உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டு அறிக்கைகளின் முன்னேற்றத்தை தனக்கு அறிவிக்குமாறு கௌரவ சபாநாயகர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்
🔸 அண்மைக்காலமாக இடம்பெற்ற மனிதப்படுகொலைகள் குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையிலான மோதல்களின் விளைவுகள் என்பதுடன் அவற்றுக்கு பிரதேச அரசியல்வாதிகளின் தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது - பதில் பொலிஸ்மா அதிபர்

தமக்குப் பாதுகாப்புத் தேவை எனக் கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான இறுதி மதிப்பீடு அறிக்கை தற்பொழுது கிடைத்துள்ள உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பதில் பொலிஸமா அதிபர் மேலும் தெரிவித்தார்.

கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்குபற்றலில் 2025.05.23 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே பதில் பொலிஸமா அதிபர் இதனைத் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் எதிர்த்தரப்பு கட்சித் தலைவர்கள் சிலர் 2025.05.20 ஆம் திகதி கௌரவ சபாநாயகரைச் சந்தித்து தமது பாதுகாப்புத் தொடர்பான சிக்கலைகளை முன்வைப்பதற்கு கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய, அன்றைய தினமே கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் கௌரவ சபாநாயகர் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதற்கமைய, இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கைகளின் முன்னேற்றத்தை தனக்கு அறிவிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தினார்.

நாட்டில் காணப்படும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் அறிவுறுத்திய பொலிஸ்மா அதிபர், அண்மைக்காலமாக இடம்பெற்ற பல மனிதப்படுகொலைகள் குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையில் இடம்பெறும் மோதல்களின் விளைவுகள் எனவும், அந்தக் குற்றச் செயல்களுக்கு பிரதேச அரசியல்வாதிகளின் தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

இங்கு எதிர்த்தரப்பு கட்சித் தலைவர்களினால் தமது தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை பெறுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள தேவை தொடர்பில் விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா கருத்துத் தெரிவிக்கையில், தனக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு வசதிகள் இல்லையெனில், தனக்கான பாதுகாப்பை செய்துகொள்வதற்கு துப்பாக்கி வழங்குமாறு முன்மொழிந்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உயர்ந்த ஜனநாயகப் பண்புகளைக் கொண்ட நாடொன்றில் பாதுகாப்புக்காக துப்பாக்கிகள் வழங்கப்படக்கூடாது எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் ஒவ்வொரு நபர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குறிப்பிடுகையில், புதிய உறுப்பினர்கள் போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் அந்த உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொருத்தமானது எனக் குறிப்பிட்டார். மேலும், கௌரவ எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் குறிப்பிடுகையில், தமது கட்சிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகள் இருந்தால் அவர்களது தகவல்களை முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அத்துடன், பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகளை பெற்றுக்கொள்ளும் வரை, முழுமையான பாதுகாப்பை அகற்றாமல், பாதுகாப்பு தேவை எனக் கூறும் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை வழங்குவது பொருத்தமாகும் எனவும் மதிப்பீடு அறிக்கை கிடைத்தவுடன் அதன் பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ எதிர்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க ஆகியோரும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 பாதுகாப்புக் கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் - பதில் பொலிஸ்மா அதிபர்

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தினால் தைசி நிறுவனத்துக்கு 37 பில்லியன் ரூபா கொடுப்பனவு

பயணிகள் வருகைக் கட்டடம் மற்றும் இணைந்த வேலைகளில் 5.44% மாத்திரம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தினால் தைசி நிறுவனத்துக்கு 37 பில்லியன் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது – அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் வெளிப்பாடு

 விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தினால் தைசி நிறுவனத்துக்கு 37 பில்லியன் ரூபா கொடுப்பனவு

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் உள்ளதாக கோப் குழுவில் புலப்பட்டது

🔸 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சில நோயாளர்கள் கட்டணம் செலுத்தவில்லை

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் உள்ளதாக கோப் குழுவில் புலப்பட்டது

பாராளுமன்றம் மே 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இந்த இரண்டு தினங்களுக்கான பாராளுமன்ற அலவல்கள் குறித்து கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் (16) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் மே 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்ற பணியாளர்களின் பௌத்த சங்கம் ஏற்பாடு செய்த வெசாக் தர்ம சொற்பொழிவு பாராளுமன்ற வளாகத்தில்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பணியாளர்களின் பௌத்த சங்கம் ஏற்பாடு செய்யும் 'வெசாக் தர்ம சொற்பொழிவு' இம்முறையும் 2025.05.15 ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு குழு அறை 1 இல் இடம்பெற்றது.

பாராளுமன்ற பணியாளர்களின் பௌத்த சங்கம் ஏற்பாடு செய்த வெசாக் தர்ம சொற்பொழிவு பாராளுமன்ற வளாகத்தில்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களை ஒருபோதும் அரசியலாக்க கூடாது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அரசியல் சந்தர்ப்பங்களாக மாற்றக்கூடாது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று  (மே 9 ஆம் திகதி) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களை ஒருபோதும் அரசியலாக்க கூடாது.  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-

பாராளுமன்றம் மே 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடும்

மே 8ஆம் திகதி சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம் குறித்த விவாதம்

மே 9 தனியார் உறுப்பினர் பிரேரணைகள் தொடர்பான விவாதம்

பாராளுமன்றம் மே 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடும்

சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

உஸ்பெகிஸ்தான், தஷ்கெத் நகரில் நடைபெறும் அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 150வது மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதிகள் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தானின் தஷ்கெத் நகரில் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 150வது மாநாடு, சர்வதேச உறவுகள், சமூக அபிவிருத்தி மற்றும் ஆளுகை போன்றவற்றில் தாக்கத்தைச் செலுத்தும் முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கெடுத்துள்ள கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர் உலகம் இன்று எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் அடங்கிய அமர்வுகளில் தமது தீவிர பங்களிப்பை வழங்கியுள்ளனர். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், மிகவும் அழுத்தமான உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை வகுக்கவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் தளமாகவும் இது அமைந்துள்ளது.

உஸ்பெகிஸ்தான், தஷ்கெத் நகரில் நடைபெறும் அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 150வது மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதிகள் பங்கேற்பு

இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே

மாத்தறை ராகுல கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை

மாத்தறை ராகுல கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு ​நேற்று (07) ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர்.

மாத்தறை ராகுல கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் ஏப்ரல் 8ஆம் திகதி நிறைவேற்றத்திற்காக சமர்ப்பிப்பு

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதற்காகச் சமர்ப்பிக்க கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் ஏப்ரல் 8ஆம் திகதி நிறைவேற்றத்திற்காக சமர்ப்பிப்பு

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் பிரதிநிதிகள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தனர்

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் (ICRC) பிரதிநிதிகள் நேற்று முன்தினம் 2025.03.26 ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் பிரதிநிதிகள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தனர்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]