
All Stories
படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு என்ற வகையில், நாம் முன்மொழியும் கல்வி சீர்திருத்தத்திற்காக ஐந்து அடிப்படை தூண்களை முன்வைக்க எதிர்பார்க்கிறோம். அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் கல்விக்காக அரசாங்கம் பாரிய தொகையை ஒதுக்கியுள்ளதாகவும், கல்வி அமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தத்திற்காக ஐந்து அடிப்படைத் தூண்களைக் கொண்ட திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அனுராதபுர போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
🔸 பெண்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தின் விளைவாக கிடைத்த இந்த வெற்றியை, இந்த மகளிர் தினத்தில் பெருமையுடன் கொண்டாட வேண்டும்...
🔸 இந்த முறை அரசியல் குடும்ப பின்னணிக்கு அப்பால் அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளின் அடிப்படையில் அதிகமான பெண்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது ஒரு நேர்மறையான முன்னேற்றமாகும் - பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்
🔸 இந்த ஆண்டு மகளிர் தினத்துடன் இணைந்து மகளிர் வாரம்...
🔸 இந்நாட்டில் பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, கட்சி பேதமின்றி, ஒற்றுமையாக நாங்கள் ஆதரவளிக்கின்றோம் - பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே
பாராளுமன்ற வரலாற்றில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு முழு இலங்கை சமூகமும் அடைந்த வெற்றியைத் தலைகீழாக மாற்ற எந்தப் பிற்போக்கு சக்தியும் அனுமதிக்கப்படக்கூடாது என கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
பார்வைக் குறைபாடு உள்ளிட்ட இயலாமையுடைய பெண்கள் உயிர்வாழ்வதற்காக மேற்கொள்ளும் போராட்டத்திற்குப் பாராளுமன்றம் உறுதுணையாகவிருக்கும் எனக் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த சமூக அமைப்பிலிருந்து பெண்கள் தவிர்க்க முடியாத முக்கிய பங்காளர்களாக இருப்பதோடு, அந்த சமூக அமைப்பின் படைப்பாற்றல் கலைஞர்களும் பெண்கள் தான். இதனால்தான் சிறந்த எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி "உலகம் சூரியனின் கதிர்கள் மற்றும் தாயின் பாலில் இருந்து உருவாக்கப்பட்டது" என்று கூறினார்.
மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி நியாயமற்ற தொழிற்துறை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஆளும் கட்சி பிரதான அமைப்பாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்தில் வீட்டிற்குக் கொண்டு செல்ல உயர்ந்த சம்பளம் மற்றும் சுகாதார சேவையில் சம்பளம் அதிகரிக்கப்படும் முறை தொடர்பாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (24) பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
வெளிநாட்டு அந்நியச் செலாவணிகளை ஈட்டிக் கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (24) பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை வெளியிட்டார்.