படலந்தை ஆணைக்குழுவின் அறிக்கை சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயகவினால் இன்று (14) பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவையினால் இந்த பட்டலந்தை அறிக்கை தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு கொள்கைத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டதாகவும் அமைச்சர் விமல் ரத்நாயக்க இங்கு தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அறிக்கையை தொடர்பாக இரண்டு நாட்கள் விவாதிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஆணைக்குழுவின் அறிக்கையை முன்வைத்த சபை முதல்வர் இங்கும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;
தலைமறையின் மனச்சாட்சியைக் கட்டுப்பத்தும் இந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் மக்கள் மயப்படுத்துவதற்கும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களை நடத்திய தலைமுறையின் கண்ணீர் அவர்கள் அனுபவித்த பூமி அறிந்த வேதனைகள் மற்றும் சோதனைகள் அவற்றுக்கு அர்த்தம் தெரிவிப்பதற்கு 208 பக்கங்களுடன் காணப்படும் இந்த அறிக்கைக்கு முடியாது என்பதை நாம் அறிவோம்.
இந்த அறிக்கை கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களின் பாசமிக்க அவர்களுடைய வேதனைகள் மற்றும் பெருமூச்சுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிக்கையாக அதனைத் தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.
ஜனாதிபதி செயலகத்தில் இருட்டறை ஒன்றில் சிறைப்படுத்தப்பட்ட படலந்தை இன்று சூரிய ஒளி பட்டதாகவும், ஜனாதிபதி செயலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த அறிக்கை 2024 செப்டம்பர் மாதத்தில் 25 வருடங்களுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதாகவும் சபை முதல்வர் குறிப்பிட்டார்.
தமது அரசியல் நோக்கங்களுக்காக நாடொன்று பல யுகங்களாக முற்றிலும் அழித்துச் செல்லப்பட்டுள்ளது. எவ்வாறு எனில், ஜனநாயகத்திற்குக் கிடைத்த மக்கள் வரத்தை தமது வகுப்பு நண்பர்களுக்காக பலிக்கடாவாக்க முடியுமா என்பது தொடர்பாக இந்த அறிக்கை ஒரு உயிர் வாழும் சாட்சியாகும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார் .