தலவில, கல்பிட்டி பவளப் பாறைகளைப் பாதுகாப்பதற்கு வனவிலங்குத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தலவில கல்பிட்டி பவளப் பாறைகள் தொடர்பாக அண்மையில் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இப்பவளப் பாறைகள் இலங்கையின் சமுத்திரக் கரையோரத்தில் மிகவும் பெறுமதியான பவளப்பாறைகளாகக் கருதப்படுகின்றன.
புத்தளம் கடற் பிராந்தியத்தில் ஆலங்குடாவில் இருந்து துடாவை வரையான கடற் பிராந்தியம் உலகின் பல்வேறு உயிரினங்கள் காணப்படும் கடற் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.