பெருவிருப்புக்குரிய உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தத்திற்கான ‘நீஸ் விழிப்புணர்விற்கான அழைப்பில்’ இலங்கை இணைகிறது

பெருவிருப்புக்குரிய உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தத்திற்கான ‘நீஸ் விழிப்புணர்விற்கான அழைப்பில்’ இலங்கை இணைகிறது
  • :
 
பிரான்ஸின் நீஸில் நடைபெற்ற மூன்றாவது ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாட்டில் (UNOC3) ஒரு துணை நிகழ்வொன்றின் போது தொடங்கப்பட்ட பேரார்வம் மிக்கதும், பயனுறுதிமிக்கதுமான உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தத்திற்கான உயர் மட்ட வேண்டுகோளான, "நீஸ் விழிப்புணர்விற்கான அழைப்பில்" இலங்கை உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளது. பிரான்ஸால் நடத்தப்பட்ட இந்நிகழ்வு, எதிர்வரும் உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தம் குறித்த அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழுக்களின் (INC 5.2) அமர்வுக்கு முன்னதாக சர்வதேசத் தலைவர்களையும், நிபுணர்களையும் ஒன்றிணைத்தது.
 
உலகளாவிய பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைத்தல், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை முற்றிலும் நீக்குதல், நிலைபேறான பிளாஸ்டிக் வடிவமைப்பை ஊக்குவித்தல் மற்றும் மாசுபடுத்துபவர் தண்டப்பணம் செலுத்துதல் கொள்கையின் மூலம் நிதி உதவியளித்தலை உள்ளடக்கிய -பயனுள்ள நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்தல் ஆகியவற்றின் மீது சிறப்புக் கவனம் கொண்ட பிளாஸ்டிக்கின் முழுச் சுழற்சியையும் நிவர்த்தி செய்யும் வலுவான சர்வதேச ஒப்பந்தமொன்றை ஆதரிக்குமாறு, "விழிப்புணர்விற்கான அழைப்பு" நாடுகளை வலியுறுத்துகிறது.
 
இம்முயற்சியை ஆதரிப்பதாக இலங்கை எடுத்த முடிவு, சுற்றாடலில் நிலைபேறான தன்மையைப் பேணுவதற்கான நாட்டின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதுடன், உலகளாவிய உற்பத்திக் கட்டுப்பாடுகள், மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு வடிவமைப்புத் தரநிலைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பை (EPR) முக்கிய செயற்படுத்தல் கருவியொன்றாக ஊக்குவித்தல் உள்ளிட்ட அதன் முன்னுரிமைகளுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது.
இவ்வொப்புதலுடன், உலகளாவிய பிளாஸ்டிக் நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு காலப்போக்கில் உருவாகும் சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்பட்ட, விஞ்ஞானபூர்வமானதும், பேரார்வம் கொண்டதுமான ஒப்பந்தத்தை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ள நாடுகளின் வளர்ந்து வரும் கூட்டணியில் இலங்கை இணைகிறது.
- வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]