All Stories

மட்டக்களப்பில் விபத்துக்களால் பறிபோகும் இலங்கையர்களின் உயிரை காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

விபத்துக்களினால் பறிபோகும் இலங்கையர்களின் உயிரை காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு அதிகாரி எம்.ரூதேசன் ஏற்பாட்டில் பிராந்திய சுகாதார பணிமனையில் நேற்று (06) இடம் பெற்றது.

 

நாடளாவிய ரீதியில் தேசிய விபத்துத் தடுப்பு ஆலோசனைக் குழு மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவினால் விபத்துக்களால் பறிபோகும் உயிரை காப்பாற்றுவதற்கான செயற்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் ஒரு விசேட திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

நேற்று (06) முதல் 10ஆம் திகதி வரை வீதி விபத்துத் தடுப்புத் தினமாகவும், ஜூலை 07, வேலைத்தள விபத்துத் தடுப்பு தினமாகவும், ஜூலை 08, வீடு மற்றும் முதியோர் இல்ல விபத்துத் தடுப்பு தினமாகவும், ஜூலை 09, நீரில் மூழ்கி இறக்கும் விபத்துத் தடுப்பு தினமாகவும், ஜூலை 10, பாலர்  பாடசாலை மற்றும் பகல்நேரப் பராமரிப்பு நிலைய விபத்துத் தடுப்பு தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வருடா வருடம் இலங்கையில் 100,00 மேற்பட்ட மரணங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 300 தொடக்கம் 350 மரணங்களும் பதிவாகின்றன.

 

மாவட்டத்தில் கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற புள்ளிவிபர தரவுகளின் படி 31,000 நபர்கள் உள்நோயாளராகவும், வெளிநோயாளர்களாக 8,000 மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

 

நாட்டில் உள்ள அரச மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் நோயாளிகளில் அதிக சதவீதத்தினர் விபத்துக்களாலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

அவற்றில் விழுதல், வீதி விபத்துக்கள், தீக்காயங்கள், மின் அதிர்ச்சி, வெட்டு காயங்கள், வேலைத்தள விபத்துக்கள், நீரில் மூழ்குதல், விலங்குகள் கடித்தல் மற்றும் வீட்டு விபத்துக்கள் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

 

சுகாதார அமைச்சு அபாயப் பகுதிகளைக் கண்டறியும் நடவடிக்கைகளையும், பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான நடைமுறைத் திட்டங்கள் மற்றும் நாடு முழுவதும் விபத்துக்களைக் குறைப்பதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

 சுகாதார அமைச்சு விபத்துக்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் விபத்துக்களால் பறிபோகும் இலங்கையர்களின் உயிரை காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிக் காசோலைகளும் கல்வி உதவித் தொகைகளும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டன

ஜனாதிபதி நிதியத்தின் நடவடிக்கைகளை பிரதேச மட்டம் வரை பன்முகப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஊடாக மருத்துவ சிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட நான்காவது மற்றும் ஐந்தாவது பயனாளிகளுக்கான நிதியுதவிகள் அண்மையில் (01.07.2026) வழங்கப்பட்டன.

ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிக் காசோலைகளும் கல்வி உதவித் தொகைகளும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டன

"தர்பூசணிச் செய்கை" நவீன பயிரிடல் முயற்சியின் முதலாவது அறுவடை..

கிளிநொச்சி மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கம், நவீன விவசாய முறையில் பயிரிடலை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.

"தர்பூசணிச் செய்கை" நவீன பயிரிடல் முயற்சியின் முதலாவது அறுவடை..

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாடுகளுள், IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெறும் நாடுகளில் இலங்கை வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாடுகளுள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெறும் நாடுகளில் இலங்கை வெற்றியை நோக்கி பயணித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாடுகளுள், IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெறும் நாடுகளில் இலங்கை வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது

"வாரி மஹிம" , "எமது பாரம்பரியம்" தேசிய வேலைத்திட்டம் முல்லைத்தீவு நீராவி ஊற்றுக்குளத்தில் ஆரம்பம்

சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் 'வாரி மஹிம – எமது பாரம்பரியம்' தேசிய வேலைத்திட்டம், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (01.07.2026) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

"வாரி மஹிம" , "எமது பாரம்பரியம்" தேசிய வேலைத்திட்டம் முல்லைத்தீவு நீராவி ஊற்றுக்குளத்தில் ஆரம்பம்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

 

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு 30 பயனாளிகளுக்கான சுமார் 95 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளைப் பயனாளிகளிடம் கையளித்தார்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு