உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர், காத்தாங்குடி நகர சபை, ஏறாவூர் பற்று, கோறளை பற்று , கோறளை பற்று மேற்கு, கோறளை பற்று வடக்கு, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென் மேற்கு மற்றும் போரதீவு பற்று ஆகிய 9 பிரதேச சபைகளுக்கான 274 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு அமைதியான முறையில் இடம் பெற்று பிற்பகல் 04.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது .
மாவட்டத்தில் 477 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெற்று 144 வாக்கெண்ணும் நிலையங்களில் பி.ப 04.30 மணிக்கு வாக்கெண்ணல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 455,520 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் மாலை 04.00 மணிக்கு வாக்களிப்பு நிறைவுற்று 60.69 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 139 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கல்குடா தொகுதியில் 1 தேர்தல் வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (06) திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பிரதான மத்திய நிலையமாகிய மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.