நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு
  • :

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வௌியிடப்பட்டது.

2025 மே மாதம் 06 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.

2025 மே மாதம் 06 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில், சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

Related Articles