339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப்பதிவுகள் இன்று (06) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,759 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இத் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,156,338 ஆகும், மேலும் 25 நிருவாக மாவட்டங்களில் 4877 உள்ளூராட்சி பிரிவுகளில் தேர்தல் நடைபெறும். அத்துடன், 5783 நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தலில் 8287 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.