2025 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
2025 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நாளை (06) நடைபெற உள்ளதுடன் அதற்காக 17,156,338 வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக தகுதி பெற்றுள்ளனர்.
இந்தக் காலப் பகுதியில் தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் 22 மற்றும் தேர்தலுடன் தொடர்பான குற்ற முறைப்பாடுகள் 03 மூன்றும் கிடைக்கப்பற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.