2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க, ஔடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும், புனர்வாழ்வளித்தலும்) சட்டத்தைத் திருத்தம் செய்தல்

2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க, ஔடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும், புனர்வாழ்வளித்தலும்) சட்டத்தைத் திருத்தம் செய்தல்
  • :

2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க, ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும், புனர்வாழ்வளித்தலும்) சட்டத்தின் மூலம் சிகிச்சைகளுக்கான அணுகலை உறுதிப்படுத்தல், புனர்வாழ்வுக்கான வசதிகளை வழங்கல் மற்றும் மீண்டும் சமூகமயப்படுத்தல் போன்ற அடிப்படை நோக்கங்களுடன் போதைப்பொருளில் தங்கியுள்ள ஆட்களுக்கு சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல் மற்றும் பின்னரான பாதுகாப்பு வழங்குவதற்கு சட்ட ரீதியான பணிமுறைச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள போதைப்பொருட்கள் மீது தங்கியுள்ள ஆட்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான அரச கொள்கை மற்றும் முதல் தடவையாக போதைப்பொருள் பாவனையாளர்களை உள்வாங்கல் தொடர்பான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தலுக்கான தகுந்த முறையான பொறிமுறையொன்றைப் பேணிச் செல்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் பொருத்தமான திருத்தங்களை 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க, ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும், புனர்வாழ்வளித்தலும்) சட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை அவசியமாகவுள்ளது.

அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க, ஔடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும், புனர்வாழ்வளித்தலும்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்கும், உத்தேச திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலாசனை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles