போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்
  • :

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி (பொறியியலாளர்) ஆசிரி கருணாவர்தனவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரி கருணாவர்தன , இதற்கு முன்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றியுள்ளார்.

Related Articles