விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபையினால் கிழங்கு மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கைகளுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்.

விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபையினால் கிழங்கு மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கைகளுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்.
  • :

விவசாய, கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயற்படும் முதன்மை நிறுவனமான விவசாய மற்றும் விவசாய காப்புறதி சபையினால் கிழங்கு மற்றும் மரக்கறி செய்கைகளுக்கான புதிய காப்புறுதுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பீட்ரூட், கோவா, கரட், லீக்ஸ், வெண்டிக்காய், போஞ்சி, கறி மிளகாய், தக்காளி, பாகற்காய், வட்டக்காய் போன்ற பயிர்ச்செய்கைகள் இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ் அடங்கும்.

அடிப்படைக் காப்புறுதிக் கட்டணத்தில் 7% ஐ மாத்திரம் தவணைக் கட்டணமாகச் செலுத்தி காப்புறுதி இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், அதனூடாக, இயற்கை அனர்த்தங்கள், கட்டுப்படுத்த முடியாத பயிர் நோய்கள், பூச்சி சேதங்கள் மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் எனபவற்றிற்கும் இழப்பீட்டைப் பெற முடியும்.

இந்தப் புதிய காப்புறுதித் திட்டத்தின் முக்கிய நோக்கம், இடர்களை நிர்வகிப்பதன் மூலம் விவசாயியை விவசாயத்தில் தொடர்ந்தும் ஈடுபட வைப்பதே ஆகும்.

Related Articles