இலங்கை போக்குவரத்துச் சபையின் நகரங்களுக்கிடையிலான சேவைகள்/தூரப் பயணச் சேவைகளுக்காக 600 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை போக்குவரத்துச் சபையின் நகரங்களுக்கிடையிலான சேவைகள்/தூரப் பயணச் சேவைகளுக்காக 600 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
  • :

இலங்கை போக்குவரத்துச் சபையின் நகரங்களுக்கிடையிலான சேவைகள்/தூரப் பயணச் சேவைகளுக்காக 600 பேரூந்துகளைக் கொள்வனவு செய்தல் தொடர்பான தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி 

 

2026 2026 ஆம் ஆண்டில் அரச முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு 49-54 ஆசனங்களைக் கொண்ட Standard மாதிரியின் புதிய 600 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக 14,400 மில்லியன் ரூபாய்கள் நிதி வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

அவ்வாறு நிதியொதுக்கீடு செய்யப்பட்ட பின்னர், வீதிப் பாதுகாப்புத் திட்டம் 2025 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்துக்கு உட்படுத்தப்படும் வாகனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

அதற்கமைய, நகரங்களுக்கிடையிலான சேவைகள் மற்றும் தூரப் பயணச் சேவைகளுக்குப் பொருத்தமான பேரூந்து பேரூந்துகள் பாதுகாப்பான வகைகள் மற்றும் அவற்றின் குறைந்தபட்ச விபரக்குறிப்புக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்விபரக் குறிப்புக்களுக்கமைய நகரங்களுக்கிடையிலான சேவைகள்/தூரப் பயணச் சேவைகளுக்காக Deluxe (வளிச்சீராக்கி பொருத்தப்பட்ட) பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.

 

அதற்கமைய, தற்போது நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ள Standard மாதிரியின் புதிய 600 பேரூந்துகளுக்குப் பதிலாக Deluxe (வளிச்சீராக்கி பொருத்தப்பட்ட) பேரூந்துகள் மிகவும் சொகுசான வசதிகளைக் கொண்ட பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles