2025 உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மருதானை பஞ்சிகாவத்தை அபேயசிங்கராம சயிகோஜி முன்பள்ளியில் இன்று (06) பிற்பகல் தமது வாக்கை அளித்தார்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க; ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதியான ஜனநாயக சுதந்திரம் எதிர்காலத்தில் இடம்பெறும் சகல தேர்தல்களிலும் மக்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
தேர்தல் வரலாற்றில் அமைதியான தேர்தல் பிரச்சாரம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மக்கள் அனுபவிப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி நாட்டில் அரசியல் கலாசாரம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், மற்றும் 336 உள்ளூராட்சி சபைகளுக்கு 8000 இற்கும் அதிகமான பிரதிநிதிகளை இம்முறை உள்ளூர் அதிகார சபை தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
