இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்.

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்.
ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வு பிரதமர் தலைமையில் கிளிநொச்சியிலுள்ள நெலும்பியச மண்டபத்தில் நடைபெற்றது.
இன்று (18) காலை 10.20 மணிக்கு, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் - தலா 70 செ.மீ அளவும், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் - தலா 2.5 மீ மற்றும் 1 மீ ஆகவும், மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் - தலா 2 மீ மற்றும் 2.5 மீ வரைம் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, மனம்பிடிய மற்றும் சோமாவதிய பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாகவும், எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, Clean Sri Lanka செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு என்பன “க்ளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் அண்மையில் (2025 டிசம்பர் 12) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திலகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி கடந்த 12 ஆம் திகதி யாழ்ப்பாண மீனவர்கள் ஒன்றிணைந்து பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தின் முன்னால் இருந்து பேரணியாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்துடன், அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கான மகஜர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அண்மையில் டித்வா புயலில் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு யாழிலிருந்து - கருவாடு உற்பத்தி செய்யும் பெண் சிறு தொழில் முயற்சியாளரான திருமதி கமலினி அண்ணாத்துரை அவர்கள் நேற்று (02.12.2025) அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவதற்காக. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இலங்கை வங்கி கணக்கிற்கு ரூபா 50,000.00 நிதியினை வைப்பிலிட்டு, அதற்கான பற்றுச்சீட்டின் பிரதியினை அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ அவர்கள் தலைமையில் நேற்று (20.11.2025) பி.ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் சிரேஷ்ட மாணவத் தலைவர்களுக்கான சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக மாணவத்தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்
கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதியுதவியுடன் மாத்தளையின் சுது கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அங்கந்த தொங்கு பாலம், அண்மையில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தலைமையில் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் நிலையான விவசாய மேம்பாட்டை உள்ளடக்கிய நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கமாக கொண்டு இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர் ஸ்தானிகராலயம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான கனடா உயர் ஸ்தானிகர் கெளரவ இசபெல் மார்ட்டின் அவர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று (31.10.2025)காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அரச உத்தியோகத்தர்களிடையே செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து செயல்படுத்தும் “AI for Transforming Public Service” எனும் செயலமர்வு, கடந்த 27 ஆம் திகதி வட மாகாண பிரதம செயலகத்தில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தேசிய நிகழ்வு குறித்து முன் திட்டமிடல் கலந்துரையாடல் இன்று (31) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலவின் தலைமையில் நடைபெற்றது.
நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]