ஜனாதிபதி செயலகத்தின் “தேசிய சிறுநீரக நோய் தடுப்பு” திட்டத்தின் கீழ், திரப்பனை மகாகணுமுல்ல கிராம சேவக பிரிவில் புதிய நீர் சுத்திகரிப்பு அமைப்பு கடந்த 12ஆம் திகதி பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
All Stories
அண்மைய வெள்ளத்தினால் சேதமடைந்த பொலன்னறுவை மாவட்ட விவசாயிகளின் விளைநிலங்களுக்கு இழப்பீடாக 139 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கான மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக விவசாயிகள் காப்புறுதிச் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை மாவட்ட செயலக அலுவலகக் கட்டடத் தொகுதியின் கூரையின் மீது பொருத்தப்பட்ட 96 கிலோ வோட் கொள்ளளவு கொண்ட சூரிய சக்தி மின் கட்டமைப்பு அண்மையில் (11) திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (13.12.2024) காலை 08.45 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார்.
பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் திரு. ஹென்றி டொனாடி அவர்கள், இன்றைய தினம் (11.12.2024) காலை 08.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.