இந்துக்களின் முக்கிய சமயச் சடங்குகளில் ஒன்றான தைப்பூச நிகழ்வு நேற்று (11) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்
உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கல் வைபவம் சிறப்புற இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.