2025 ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 50மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிய மழை பெய்யலாம்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக் கூடிய தற்காலிக கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் காலையில் பனிமூட்டம் காணப்படக்கூடும்