அம்பலாந்தோட்டை - ரிதியகம சஃபாரி பூங்காவில் மூன்று மாத வயதுடைய ஆறு சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடும் விழா நேற்று (12) நடைபெற்றது.
ஆறு சிங்கக் குட்டிகளுக்காக 4000 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதுடன் அதில் தெரிவுசெய்யப்பட்ட ஆறு பெயர்களை சூட்டும் நிகழ்வு மிருகக் கட்சிசாலைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். சி. ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
அதன்படி ஆண் சிங்கத்திற்கு மேக்கா என்றும், பெண்சிங்கங்கள் ஐந்திற்கும் டாரா, ஆக்ரா, பூமி, அகீரா மற்றும் எல்சா எனும் பெயர்களை வைப்பதற்கு மிருகக்காட்சிச் சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.
அந்தப் பெயர்களைப் பரிந்துரை செய்தவர்களில் மூன்று பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
அந்தப் பெயர்களைப் பரிந்துரை செய்தவர்களில் மூன்று பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
லாரா மற்றும் சூலாவின் குட்டிகள்
1. மேக்கா (ஆண்குட்டி) - உதும் இந்துவர (காலி)
2. டாரா - அஹின்ஸா டில்ருக்ஷி (தெரணியகல)
3. அக்ரா - (தேமிந்தி தேஹன்ஷா)
டோரா மற்றும் வோலி யின் குட்டிகள்
1. பூமி - நிஷிதா எகொடகெதர
2. அகீரா -- துலீஷா பரணமான (பதுளை)
3. எல்சா - திலீபா நிர்மால் (பிங்கிரிய)